Tuesday 24 April 2012

கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.

      இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகிறது இதை தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாக சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

 

பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும்  திருடப்படுகிறது எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம், பலருக்கு புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாக பதில் சொல்கிறது.
இணையதள முகவரி : http://www.google.com/goodtoknow/
இணையத்தில் எப்படி நாம் தகவல்களை சேமிக்கிறோம், எங்கெல்லாம் தகவல்கள் எப்படி எல்லாம் பரிமாறப்படுகிறது என்பதை தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்வதற்காக கூகிள்  Google to Know என்ற சிறப்பு பக்கத்தை உருவக்கியுள்ளனர். இமெயில் முதல் இணையம் வரை எப்படி எல்லாம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக ஒவ்வொரு படியாக சொல்லித்தருகின்றனர், இண்டர்நெட் பயன்படுத்தும் புதியவர்கள் முதல் ஏற்கனவே இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்களுடனே சொல்கின்றனர். ஒருவருக்கு தேவையில்லை என்று விடும் தகவல்கள் கூட அடுத்தவருக்கு தேவையானதாக இருக்கலாம். கூகிளின் இந்த பாதுகாப்பு வழிமுறையை அனைவரிடமும் எடுத்துச்செல்லுங்கள், இணையத்தில் பாதுகாப்பாக வலம் வர அனைவருக்கும் உதவும்.

No comments:

Post a Comment