Sunday 22 April 2012

மருத்துவரே வேண்டாம்-யோகா செய்யுங்கள்


நமக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த பல பொக்கிஷங்களில் இந்த ஹத்த யோகா மிக முக்கியமானது. அறிவியல் பூர்வமாக நிருப்பிக்கப் பட்ட ஒரு சிறந்த மன மற்றும் உடல் நலம் பேணலில் முக்கிய பங்காற்றுகிறது இந்த ஹத்த யோகா.

இயற்கையாகவே வெளியிலிந்து ஒன்றும் உடம்பினுள் செலுத்தாமல் நம்மால் நமக்கு என்ன செய்து கொள்ள முடியும் என்றால், நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த ஹத்த யோகத்தின் மூலமாக அடையும் நன்மைதான்.

நான் வால்பாறையில் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஆழியார் அணைக்கு பக்கத்தில் பேருந்துகள் தேநீர் இடைவெளிக்காக நிறுத்துவார்கள். அப்பொழுது அங்கு ஒரு குண்டலினி சார்ந்த ஆஸ்ரம் இருப்பதை பார்பதுண்டு (மகரிஷி என்று நினைக்கிறேன்). அதனை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு, நமக்கும் அதுக்கும் வெகுதொலைவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன், பயத்துடன்.

அப்பொழுது ஒரு நண்பி ஒருவரால் எனக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் (வெள்ளைக் கார)மாஸ்டர் ஒருவரை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கோவையில் உள்ள சுவாமி சச்சிதானந்தா யோகா நிறுவனத்தில்.

இருப்பினும் எனக்கு கொஞ்சம் அச்சமிருந்தது, அதனைப் பற்றி அரசல் புரசலான கட்டுக் கதைகளை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்ததால் என்று நினனக்கிறேன். அதாவது, யோகாவெல்லாம் வாழ்வில் சாமியாராக போக எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான், அப்படி எண்ணமில்லாமல் சேர்ந்து செய்தாலும் நீயும் அப்படியாக ஆகிவிடுவாய் என்று. அது போன்ற பயமே அந்த காலக் கட்டத்தில் என்னை விலகியே இருக்க வைத்தது.

ஆனால், இங்கு நண்பர்களின் துணை கொண்டு இறங்குவதால், என்னதான் ஆகும் செய்து பார்த்து விடுவோமே என்று, காலை 5.30 லிருந்து 7 மணி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு இரண்டு மாதங்கள் ஹத்த யோகம் பயின்றேன். அதுதான் நான் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான காரியம் என்று தினமும் நினைத்து இன்று பெரிமிதம் கொள்கிறேன்.

அந்த நாட்களில் எனக்கு கிடைத்த அனுபவமும், யோகப் பயிற்சியும் பின்னாலில் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த ஒரு மரக் கட்டை துண்டு போல என்னை இந்த வாழ்வெனும் சமுத்திரத்தில் சிக்கி மூழ்கி போவதிலிருந்து காத்து வருகிறது என்றால் அது மிகையாகது. எந்தந்த வகையில் என்று சொல்கிறேன். வாருங்கள்.

ஆனால் ஒரு டிஸ்கி, நான் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆசனங்களின் படமும் அதனை செய்வதால் உடலுக்கும் மனத்திற்கும் கிடைக்கும் பலன்களும் என்ன என்பதனைப் பற்றியதுதான். உங்களுக்கு இது பற்றிய ஒரு ப்ரக்ஞை கொடுப்பதற்கெனவே. எப்படி செய்வது என்பதனை முறைப்படி ஆசிரியர் கொண்டு கற்பது மிகவும் அவசியம். கற்றால், என்றென்றும் உடல் நலம் சீராக உங்கள் கையில்.

யோகா செய்து வருவதால் எதிலும் ஒரு நிதானம் வருகிறது. ஏனெனில் யோகா உடலிற்கும் மனத்திற்கும் தொம்புட்டி எதிலும் எப்பொழுதும் அளவோடு (Moderation) ஈடுபடும் படி நம்மை அறியாமலேயே மனத்திற்கு ஒரு ஸ்திர தன்மையினை வழங்கிவிடுகிறது அதன் பக்க விளைவாக. ஏன் உடலுக்கும் தான் (சாப்பிடுவதில் கூட).

இந்த ஜிம், விளையாட்டு மைதான உடற் பயிற்சிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதனை கண்டறிய பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் விளங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஆசனமும் நம் உடலினுள் உள்ள உள் உறுப்புகளின் வேலைகளை சரிவரச் செய்ய உதவி புரிகின்றன.

இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து ஒரு பத்திற்கும் மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்யும் படியான சூழ்நிலை. ஆதனால் இன்று போல் என்றும் இந்த யோகாவிற்கு தேவை வரலாற்றில் இருந்திருக்க முடியாது

முதுகு தண்டுவடத்திற்கும் (Spinal Chord) யோகாவிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தண்டுவடத்தின் மூலமாகவே எல்லா நரம்புகளும் பிண்ணப்பட்டுள்ளன, செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இயங்குவதற்கும் இத் தண்டுவடம் உதவுகிறது

இச் சூழ்நிலையில் தண்டுவட பகுதியை தினமும் முறுக்கி, அப்பகுதியிலும் மற்ற பகுதியிலும் இரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜனேற்றமும் செய்யும் பொழுது உடலும், மனமும் புத்துணர்வு பெற்று வார்த்தைகளில் அடங்கா பேரின்பத்தை உணர வழிவகை செய்கிறது.

எப்பொழுது ஒருவருக்கு வியாதி வருகிறது என்றால் ஒரு உடலுறுப்பில் உள்ள பகுதிகளில் போதுமான அளவிற்கு இரத்த ஓட்டமும், ஆக்ஸிஜனேற்றமும் தடையிறும் பொழுதுதான். அதனை இந்த யோக ஆசனங்களை கொண்டு, உள் உறுப்புகளை மசாஜ் செய்வது போல இழுத்தும், சுருக்கியும், அழுத்தியும் ஏன் அந்த உறுப்புகளின் மீது நமது எண்ணத்தை குவிப்பதின் மூலமாகவும் அதன் செயல்பாடுகளை துரிதப் படுத்துகிறொம். வியாதியும் பக்கத்தில் வராமல் இருக்கிறது.

இப்பொழுது விசயத்திற்குள் செல்வோம் வாருங்கள் நண்ப/நண்பிகளே.

I) Surya - Namaskar (Sun Salutation) - சூரியனுக்கு வணக்கம்
இந்த படத்தை நன்கு கவனித்து பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெரியும் உடலின் இலகுத் தன்மைக்கென நீட்டி, மடக்கி விளையாட்டு மைதானத்தில் செய்யப்படும் ஒரு warm up உடற்பயிற்சி போலவே தென்படும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதனைத் தாண்டியும் மிக்க பலனளிப்பது.
இருந்தாலும் நான் கற்றுக் கொள்ளும் பொழுது ஆசிரியர் கூறினார், இந்த நாளை எப்படி தொடங்க வேண்டும் என்பதனை இதனை செய்யும் வேகத்தைக் கொண்டு அறிதியிட்டுக் கொள்ளலாமென. உடல் சார்ந்த வேலை இன்று உண்டா - சற்று வேகமாக ஒவ்வொரு நிலையையும் மாற்றிச் செய்யுங்கள். அமைதியான மனத்தை ஈடுபடுத்தி சாந்தமாக இருக்க - மெதுவாக ரிதமிக்காக செய்யுங்கள்.

ஆனால், மற்ற ஆசனங்கள் செய்வதற்கு முன்பு, இதனைச் கண்டிப்பாக செய்தால் சேம்பேறித்தனம் நம்மை விட்டு விலகிவிடும். மற்ற ஆசனங்கள் செய்வதும் எளிது. சில நேரங்களில் நிறைய நேரம் இல்லை என்றால் ஒரு மூன்றிலிந்து ஐந்து முறை "சூரிய நமஸ்காரம்" செய்து விட்டு அன்றைய தினத்தை ஓட்டிவிட இது உதவும்.

II) Naga Asana - The Cobra Pose

இந்த படத்தில் காட்டியது போல, இந்த ஆசனம் செய்யப்படும் பொழுது முதுகொலும்பு முறுக்கப்படுகிறது, மணிக்கட்டுக்கு ஸ்திரத்தன்மையும், மார்பு தசைகளும் பயனடைந்து, புத்துணர்வு பெறுகிறது.

முறையாக செய்வதின் பொருட்டு இடம் விலகிப் போன "தண்டுவடத் தட்டு (displaced spinal disc)" திரும்பவும் இருந்த இடத்தில் கொண்டுவரும் சிகிச்சையில் பயனுட்டுவதாக தெரிகிறது.

இது போன்று தண்டுவடத்தை முன்னிறுத்தி செய்யப்படும் ஆசனங்கள் தட்டுக்களுக்கிடையே உள்ள ஸ்பாஞ்சிகளில் ஆயில் அடிப்பது போல அடித்து இலகுத்தன்மையை மெருகூட்டி கொள்ளலாம் [Flexibility enhancement].

III) Shalabha Asana - The Locust Pose

இந்த ஆசனத்தின் மூலமாக மேல், கீழ் இடுப்புத் தசைகளின் ஸ்திரத்தன்மையும், இலகுத் தன்மையும் ஈட்டப் படுகிறது.

அது மட்டுமன்றி பெறுகுடல், சிறுகுடல், வாயு பிரட்சினை, சிறு நீரக நீர்ப்பை (bladder) போன்றவைகளில் உள்ள பிரட்சினைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறது. தண்டுவடமும் பயனடைகிறது என்பதனை சொல்லவும் வேண்டுமோ.

கால்கள் விரைத்து நீட்டப் பெறுவதால் அதுவும் ஸ்திரத் தன்மையடைகிறது.

IV) Dhanura Asana - The Bow Pose

மீண்டும் முதுகொலும்பிற்கு வலிமையையும், புத்துணர்வையும் ஊட்டும் ஒரு ஆசனம். இது இடுப்பு, கழுத்து வலி போன்றவைகள் வராமல் தடுக்க சிறந்த காப்பீடு.

வயிற்றுப் பகுதி நன்றாக இழுத்து விடப்படுவதால் அஜீரணக் கோளாரு நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறது.

அந்த படத்தில் இருப்பதைப் போன்று கால்களை கையால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஊஞ்சலைப் போன்று முன்னும் பின்னும் சென்று வந்தால், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் அடையப் பெறுவதால், மண்ணை திண்ணாலும் செரிச்சுப் போகுது எனக்கு.

பல காலங்கள் செய்து வந்தால் உடம்பின் மேல் பாதி நல்ல ஸ்திரத் தன்மை அடையப் பெறலாமாம்.

V) Sarvanga Asana - The Shoulder Stand

இதன் முக்கியப் பயன் கழுத்து (அங்கேதானே இருக்கு தைராய்டு, பாரா தைராய்டு), முதுகுத்தண்டு, மார்பு இவைகளுக்கு இலகுத்தன்மையினை வழங்குவதோடு, பின்னால் கூறப் போகும் சக்ரா மற்றும் தலை கீழாக நிற்கும் ஒரு ஆசனத்திற்கு கிடைக்கும் அத்துனை பயன்களும் இதற்குமுண்டு.


VI) Hala Asana - The Plow Pose

மேலே பேசப்பட்ட ஆசனம் செய்யும் பொழுதுதே இதனையும் செய்ய முடியும், என்ன கால்களை தலைக்கு நேராக கொண்டுவருவதற்கு முன்பாக பின்னால் கொண்டு சென்று தரையை படத்தில் உள்ளவாறு தொட்டு நிறுத்தி வைத்துவிட்டால் அவ்வளவுதான் இந்த ஏர் ஆசனம்.
 

இது கால்களுக்கு இலகுத் தன்மையை வழங்குகிறது. மூட்டுவலி, தைராய்டு, மார்பகப் பகுதி நன்கு அழுத்திவிடப்படுவதால் நுரையீரல், மற்றும் வயிறு, இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல ஆக்ஸிஜனேற்றமும் அப்பகுதிகளில் நடை பெறுகிறது.

 
VII) Ugra Asana - The Noble Pose

இந்த வகை ஆசனத்தில் படத்தை கவனித்தால் தெரியும் உடம்பின் முன் பாதியை தாழ்த்தி கைகளை கொண்டு கால்களை தொட்டு ரிலாக்ஸ் செய்யும் பொழுது, முதுகொலும்பு மற்றும் பின் தசைகள் வளைக்கப் பட்டும், நீட்டப் பட்டும் இருப்பது.

அது மட்டுமல்லாமல் வயிறுப் பகுதி இறுக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் மீண்டும் பழைய நிலைக்கே திருப்பப்படுகிறது. அதனால் அப்பகுதிகளில் இரத்த ஓட்டம் அதீதப் படுத்தப்படுகிறது. இதுவே அப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு ஒரு பொலிவை கொடுக்கிறது.

எல்லாவற்றுகும் மேலாக சீரணக் கோளாறு, மலச்சிக்கல் இந்த ஆசனம் செய்யும் பொருட்டு தவிர்க்கப் படுகிறது. கால்களுக்கு அசதியிலிருந்து ஒர் ஓய்வும் உண்டு.

VIII) Matsya Asana - The Fish Pose

இது மேலே பார்க்கப்பட்ட ஆசனத்தை தொடர்ந்து செய்வது நலம். மார்ப்புப் பகுதியை முன் தள்ளி விரியவைப்பதால், அதிகப்படியான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. சுவாசப் பகுதியில் உள்ள கற்றடைப்பும், இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றமும் நடைபெறுகிறது.

  படத்தைப் பார்த்தால் தெரியும், தலை தலைகீழாக வைக்கப்பட்டிருப்பதை. அப்படி வைத்துப் பிடிக்கும் பட்சத்தில் சைனஸ் பகுதி விரிவடைந்து அது சம்பந்தப்பட்ட அடைப்பு மட்டும் ஏனைய பிரட்சினைகளிலிருந்து படிப்படியாக நிவாரணம்.

IX) Sirsha Asana - The Headstand

நாள் முழுவதும் நாம எல்லோரும் உட்கார்ந்துகிட்டோ அல்லது நடந்தோ செல்லும் பொழுது, அன்னிச்சையாக நமது இதயம் தான் பாட்டுக்கு மல்லுக் கட்டி இரத்தத்தை முடிந்தளவிற்கு தலைப்பகுதிக்கு உந்தித் தள்ளிக் கொண்டு இருக்கிறது, இல்லையா.

அது அப்படியாக இருக்கையில் இயற்கைக்கு மாறாக நாமாக வழிய சென்று, அந்த தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதீதப் படுத்தி புத்துணர்வு ஊட்டத்தான் இந்த தலைகீழாக நிற்கும் ஆசனம்.

இதன் மூலமாக உடம்பின் எல்லா பகுதிகளுமே பயனடைகிறது என்றால் அது மிகையே கிடையாதுங்க. கால் மேலேலேலே இருப்பதால் இப்ப, சாதராணமாக நடைபெறும் இரத்த ஓட்டம் சற்று நம் முயற்சியால் தலைகீழாக நடக்கிறது. அதன் பலனும் சொல்லிளடங்கா.

இந்த ஆசனம் முறைப்படி செய்யக் கற்று கொண்டால் concentration சக்தி கூடி, மெது மெதுவாக தியானத்தில் உட்புக உதவும்.

X) Chakra Asana - The Wheel Pose

இது கொஞ்சம் கஷ்டமான ஆசனம்தான். இருந்தாலும், சிறந்த வழியில் பயனுள்ளதாக அமைகிறது. இது முழு உடம்புக்குமே வலிமையை கொடுக்கக் கூடியது. அதிலும் சிறப்பாக கார்டியோ வஸ்குலார் சம்பந்தபட்ட வகையில் (இதயம்) மிக்க பலனுடையது. மேலும், கைகால்கள், தோள்பட்டை, முதுகொலும்பு எல்லாவற்றுகும் வலிமை சேர்க்க உதவுகிறது.

இதில் முழுமை அடையா விட்டாலும், கொஞ்சம் வந்தால் கூட பலன் என்னவோ உறுதி.

XI Ardha Matsyendra Asana - The Half Spine Twist Pose

இந்த ஆசனம்தான் முதுகுத் தண்டுவடத்தை முறுக்குவதிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது.
கம்பியூட்டர், மற்றும் ட்டி.வியின் முன்னால் அதிக நேரம் அமர்ந்து  இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக்க உதவலாம். ஒரே நேரத்தில் எல்லா உடம்புப் பகுதிகளுமே இறுக்கப்பட்டு தளர்த்தப் படுவதால் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் துரிதப் படுத்தப் பட்டு பயன் அடைகிறோம்.

வயிற்றுப் பகுதி நன்கு அமுக்கப் படுவதால், அப்பகுதியின் தசைகள் நன்கு பொலிவடைகிறது.

XII) Sava Asana - The Corpse Pose

இது நம்ம எல்லோருக்கும் பிடிச்ச ஆசனம் ;-) பண்ண ஆரம்பிச்சாலே சும்மா தூக்கம் சொக்க ஆரம்பிச்சுடும். நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆசனம் செய்து முடித்தவுடன், ரிலாக்ஸ் ஆவதற்கும் மனதை அடுத்த ஆசனம் செய்வதற்கு தயார் செய்வதற்கும் இந்த ஆசனத்தை தவறாமல் செய்வேன்.

இரவில் தூக்கம் வரதாவர்கள் இந்த ஆசனத்தின் படி மனத்தையும், உடம்பையும் எப்படி ரிலாக்ஸ் செய்வது முறைப்படி என்று தெரிந்து கொண்டால் ஈசியாக தன்னை தூங்கப் போட்டுக் கொள்ளலாம்.

இந்த எளிய ஆசனத்தின் மூலமாக இரத்தக் கொதிப்பைக் கூட கட்டுப் படுத்த முடியும். ஏனெனில் இந்த ஆசனத்தில் மனதற்ற நிலையில் இருக்க முயற்சி எடுப்பதால், மிகவும் அமைதியான சூழல் நமக்கு எட்டுகிறது.


Naadi Suthi and Pranayama

கபால சுத்தி பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (சப்பனம் போட்டு), அடி வயிற்றிலிருந்து காற்றை உந்தி தள்ளுவது வேகமாக. அப்படி பல முறை செய்து, சுவாச பகுதியை சுத்தம் செய்து விட்டால், பிறகு நாடி சுத்திதான்.

நம் உடம்பில் மூன்று முக்கிய நாடிகள் உள்ளனவாம். அவைகள் முறையே இடா (Ida), பிங்கல(Pingala) மற்றும் சுஸ்ம்ன (Sushmna).

இதில் மூச்சுக் காற்றை இடது மூக்குத் துவாரத்தின் வழியே இழுக்கும் பொழுது (வலதை மூடிக்கொண்டு) - உடம்பு குளிர்ச்சியடைகிறதாம் (இட நாடி). பிறகு அந்த அசுத்தக் காற்றை வலது மூக்குத் துவாரத்தின் வழியே வெளிச் செலுத்தி (இடதை மூடிக்கொண்டு), பிறகு சுத்தக் காற்றை அதே துவாரத்தின் வழியே உள் வாங்குவது (பிங்கல நாடி) - உடம்பு உஷ்ணமேற்றப் படுகிறதாம். இது இரண்டும் சம நிலையில் இருப்பது அவசியம் தானே

சுஸ்ம்ன, தியானத்தின் போது இரு நாடிகளைக் கொண்டும் சீராண முறையில் சுவாசிக்கும் முறை.

நோய் எதிர்ப்பு சக்திக்கு மூச்சுப் பயிற்சி!
டாக்டர் இந்திரா மணவாளன்
சென்னை இயற்கை மற்றும் சித்தா மருத்துவமனை
சூரிய பேதனா: நேராக நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் இடது துவாரத்தை மூடிக்கொண்டு வலது துவாரத்தின் வழியே மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இடது துவாரத்தின் வழியே மெதுவாக வெளியே விடவும். இதேபோல 20 லிருந்து 30 தடவை செய்யவும். இதை எல்லோரும் செய்யலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் அதிக உடல் பருமனைக் குறைக்கலாம்.
சந்திர பேதனா: நேராக நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் வலது துவாரத்தை மூடிக் கொண்டு இடது துவாரத்தின் வழியே மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வலது துவாரத்தின் வழியே விடவும். மூச்சை அடக்கக் கூடாது. இதேபோல் 20 முதல் 30 முறை செய்யவும். இதை எல்லோரும் செய்யலாம்.
கபாலபதி: நேராக நிமிர்ந்து உட்காரவும். வயிற்றுத் தசைகளின் உதவியோடு நுரையீரலில் இருக்கும் காற்றை வெளியேற்ற வேண்டும். இவ்வாறே தொடர்ந்து காற்றை வெளியேற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். சிறிது மூச்சு தானாகவே உள்ளே போகும். அதைப் பற்றி நினைக்க வேண்டும். உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுவதுதான் நமது நோக்கம். அதை வேகமாக தொடர்ந்து செய்ய வேண்டும். நிமிடத்திற்கு 120 முறை செய்யலாம். எவ்வளவு முடியுமோ அதைச் செய்தால் போதும். சிரமம் எடுத்து செய்யக்கூடாது. மூச்சை அடக்கக் கூடாது. வயிற்றுப்பகுதி வேகமாக உள்ளே சென்று வெளியே வர வேண்டும்.
பயன்கள்:
1. மூளை நரம்புகளைத் தூண்டும்.
2. மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
3. தலையில் உள்ள சளியை வெளியேற்றும்.
4. சைனஸ், தூசி ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
5. நுரையீரலில் கொள்ளளவுத் திறனை அதிகரிக்கும்.
மேலும் அதிலுள்ள சளியை வெளியேற்றும். எனவே ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
1. அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
2. இருதய நோய் உள்ளவர்கள்
3. மூளையில் ரத்தக் குழாயில் பிரச்சனை உள்ளவர்கள்
சீதகாரி: நிமிர்ந்து நேராக உட்காரவும். மேல்தாடை மற்றும் கீழ்த்தாடைப் பற்களைச் சேர்த்து வைக்கவும். இரண்டுக்கும் இடையேயுள்ள துவாரத்தின் வழியே காற்றை உறிஞ்சவேண்டும். பின்னர் மெதுவாக காற்றை மூக்கின் வழியே வெளிவிடவும். இதில் 10 முதல் 20 வினாடி வரை மூச்சை அடக்கிக் கொள்ளலாம். இதேபோல் 20 முதல் 30 முறை செய்யவேண்டும்.
சீதலி: நேராக நிமிர்ந்து உட்காரவும். பின்பு நாக்கை வெளியே நீட்டி குழாய் போல் உருட்டி அதன் வழியே காற்றை மெதுவாக உள்ளே உறிஞ்சவேண்டும். பின்பு மூக்கின் வழியே விடவேண்டும். இதை நிதானமாக 10 முதல் 20 முறை செய்யலாம்.
பயன்கள்:
1. உடம்பிற்கு குளிர்ச்சியைத் தருவதால் சூடு அதிகம் இருப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும்.
2.
மனத்தை சாந்தப்படுத்துவதால் டென்ஷன், படபடப்பு, மனஅழுத்தம் மற்றும் மன உளைச்சலைக் குறைக்கும். பல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
தவிர்க்க வேண்டியவர்கள்: ஆஸ்துமா நோயுள்ளவர்கள், அடிக்கடி சளி, இருமல், சைனஸ் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மற்றும் குளிர்ப்பிரதேசங்களில் இருப்பவர்கள்.
உஜ்ஜயி: நேராக நிமிர்ந்து உட்காரவும். வலது மற்றும் இடது துவாரங்கள் வழியே மூச்சை உள்ளே மெதுவாக இழுத்து வெளியே விட வேண்டும். அப்பொழுது ஒரு விதமான சத்தம் வரும். இதேபோல் 10 தடவை செய்யவும்.
பிரம்மரி: நேராக நிமிர்ந்து உட்காரவும். மூச்சை மெதுவாக மூக்கின் வழியே உள்ளே இழுக்கவும். பின்பு சிறிது நேரம் அடக்கி மெதுவாக வெளியே விடவேண்டும். அப்பொழுது ஒருவித 'மியூசிக்' போன்ற சத்தம் கேட்கும். இதை 10 முதல் 20 தடவை செய்யலாம். குடும்பத்தில் உள்ள எல்லோரும் முதல் இரண்டு வகையான பயிற்சிகளைச் செய்யலாம். இதை நல்ல காற்றோட்டமான இடத்தில்தான் செய்ய வேண்டும். வயிறு காலியாக இருக்க வேண்டும். தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதால் இருதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தின் எண்ணிக்கை குறையும். மற்றும் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும்.
இதுபோன்ற மூச்சுப் பயிற்சிகளால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


No comments:

Post a Comment